இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
13 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தசாவதாரம் இந்திய சினிமாவில் முக்கியமான படம். காரணம் அதில் கமல்ஹாசன் 10 வேடத்தில் நடித்திருந்தார். படத்தின் 13ம் ஆண்டை முன்னிட்டு கமல்ஹாசன் தனது முகநூலில் நீண்ட நினைவுகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருக்கும் சுவையான தகவல்கள் வருமாறு :
படத்தின் கதையைப் பல முன்னணி இயக்குநர்களிடம் கூறினாலும் அவர்களால் கதையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இயக்கவும் மறுத்துவிட்டார்கள். நகைச்சுவைப் படங்களில் மட்டுமே பணியாற்றியிருந்த கே.எஸ்.ரவிகுமார் மாபெரும் கற்பனையையும் வருடக் கணக்கிலான கடின உழைப்பையும் கொண்ட இந்தக் கதையை இயக்க முன்வந்தார்.
திரைக்கதை எழுதுவதற்கு முன்பாக மூத்த இயக்குநரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசனிடம் கதையைக் கூறி அவருடைய கருத்தைப் பெற்றிருக்கிறார் கமல். அதைத் தொடர்ந்து சுஜாதா, மதன், கிரேஸி மோகன், நடிகர் ரமேஷ் அரவிந்த் ஆகியோர் இணைந்து கதை விவாதம் நடத்தி இருக்கிறார்கள்.
10 தோற்றங்கள் மற்றும் அவற்றின் மேக்கப்புக்கான சோதனைக்கு மட்டும் 21 நாட்கள் அமெரிக்காவில் முகாமிட்டிருக்கிறார் கமல். இந்தியன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் மேக்கப் கலைஞரான மைக்கேல் வெஸ்ட்மோர் இந்தப் படத்திலும் பணியாற்றினார்.
படத்தின் இறுதிக் காட்சியைச் சுனாமி பின்னணியில் படமாக்குவதற்குத் ஒரு கோடி செலவானது, தசாவதாரம் உருவான காலகட்டத்தில் ஒரு கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. அதனால் சுனாமி இல்லாமல் படமாக்கும் வகையில் படத்தின் இறுதிக் காட்சியை மாற்றியமைக்க முன்வந்தார் கமல்.
ஆனால், படத்தின் இயக்குநர் ரவிகுமார் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட இறுதிக் காட்சியைத்தான் படமாக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்துள்ளார். இறுதியில் கமல் தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்து அந்த காட்சியை படமாக்க உதவி உள்ளார்.
12ஆம் நூற்றாண்டில் சோழ மன்னன் ஆட்சிக் காலத்தில் நடைபெறும் 10 நிமிடக் காட்சிகளுக்காக 2.5 கோடியில் செட் போட்டுப் படமாக்கப்பட்டுள்ளது.
10 வேடங்களில் கிருஷ்ணவேணி பாட்டி வேடம் கடுமையாக இருந்தது. பல்ராம் நாயுடு வேடம் எளிதாக இருந்தது.
படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் பணியாற்றிய நிறுவனம் 2 மில்லியன் கூடுதல் கட்டணம் கேட்டது. அதைக் கொடுக்க முடியாததால்தான் படத்தின் இறுதிப் பகுதிகளில் கிராபிக்ஸ் எதிர்பார்த்த அளவு அமையவில்லை.
இதுபோன்ற பல தகவல்களை கமல் வெளியிட்டுள்ளார்.