இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
நடிகை ஹன்சிகாவின் 50வது படம் மஹா. இதில் சிம்பு கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். யு.ஆர்.ஜமீல் இயக்கி உள்ளார். மதியழகன் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும், இன்னும் வெளிவராமல் இருக்கிறது. இந்த நிலையில் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் மதியழகன் முயற்சி செய்தார்.
இதற்கிடையில் தனக்கு தெரியாமல் படத்தின் காட்சிகளை மாற்றி அமைத்தும், எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை தராமலும் படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் முயற்சிகள் நடப்பதாகவும், படத்தை வெளியிட தடை கோரியும் இயக்குனர் யு.ஆர்.ஜமீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், படத்தின் உருவாக்கம், தலைப்பு உள்ளிட்ட எதிலும் இயக்குனருக்கு எந்த உரிமையும் இல்லை என ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதோடு படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக இயக்குனர் யு.ஆர்.ஜமீலுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கி 5 லட்சத்து 50 ஆயிரத்தை வழங்கவும் தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டது.