புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அட்லீ, 2013ல் வெளிவந்த 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது அறிமுகப்படத்திற்கும், அடுத்து இயக்கிய இரண்டாவது படமான விஜய் நடித்த 'தெறி' படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ்குமாரைத் தான் இசையமைக்க வைத்தார். இரண்டு படங்களிலுமே பாடல்கள் ஹிட்டாகவே அமைந்தன.
ஆனால், அடுத்து விஜய்யை வைத்து இயக்கிய 'மெர்சல், பிகில்' இரண்டு படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கூட்டணி சேர்ந்தார் அட்லீ. இந்த இரண்டு படங்களிலும் பாடல்கள் தாறுமாறாக ஹிட்டாகின. இப்போது வரையிலும் ரசிகர்கள் அப்பாடல்களை ரசித்து வருகிறார்கள்.
'மெர்சல்' படத்தில் இடம் பெற்ற 'ஆளப் போறான் தமிழன்', 'பிகில்' படத்தில் இடம் பெற்ற 'சிங்கப்பெண்ணே' இரண்டு பாடல்களுமே எவர்கிரீன் பாடல்களாக மாறின.
அட்லீ, அடுத்து ஹிந்தியில் ஷாரூக்கான் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்று பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையாம். மேலும், ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, எடிட்டராக ரூபன் என 'மெர்சல், பிகில்' கூட்டணியையே ஹிந்திப் படத்திற்கும் தொடர உள்ளார் என்கிறார்கள்.
கொரோனா சிக்கல் முழுவதமாக தளர்ந்த பிறகு அட்லீ - ஷாரூக்கான் படம் பற்றிய அறிவிப்பு வெளிவரும் எனத் தெரிகிறது.