புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நடிகர் நடிகைகள் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறி வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். காமெடி நடிகர் வடிவேலு அவ்வப்போது தன் பாணியில் காமெடியாக பேசி வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவார். இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
கொரோனாவால் பீதிக்கு மேல பீதி ஏற்பட்டிருக்கு. வெளியே போக கூடாது. யாரையும் தொட்டு பேசக்கூடாது. கை கொடுக்க கூடாதுன்னு சொல்றாய்ங்க. நம்ம கையவே ஒண்ணா சேத்து கும்பிடுறதுக்கு பயமா இருக்கு. மருத்துவ உலகத்தையும் மனித உலகத்தையும் மிரட்டி வைத்துள்ளது கொரோனா. இந்த மாதிரி யாருமே பார்த்தது இல்லை.
என்னிடம் ஒரு அம்மா எப்போது நடிக்க போகிறீர்கள் என்று கேட்டார். இப்போது நடிக்க வருவதற்கும் படம் எடுப்பதற்கும் யாரும் தயாராக இல்லை. படம் பார்க்க வருவதற்கும் யாரும் தயாராக இல்லை. அப்புறம் எப்படி நான் தனியாக போய் நடிப்பது.
இறைவன் கொரோனா என்ற ஒரு படத்தை ரிலீஸ் செய்து இருக்கிறான். அந்த படத்தையும் வீட்டுக்குள்ளேயே இருந்து பார்க்க சொல்லியிருக்கான். கொரோனா படத்தை இறைவன் எப்போது தூக்குவான் என்றே தெரியவில்லை. அதை தூக்கினால்தான் எல்லோரும் வெளியே வர முடியும்.
ஒரு படத்தில் சும்மா உட்காருவது எவ்வளவு கஷ்டம் என்று காமெடியாக நடித்து இருந்தேன். ஆனால் உண்மையிலேயே சும்மா உட்கார்ந்தால் எப்படி இருக்கும் என்று எல்லோரையும் உணர வைத்து இருக்கிறான் இறைவன். பயம் வேண்டாம். கொரோனாவை எல்லோரும் சேர்ந்து, அரசு சொல்வதை கேட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் தொட்டு பேசாமல் வெல்வோம்.
மாமன் மச்சானை பார்த்தாலும் மச்சான், மாப்ளேன்னு கட்டிப்புடிச்சிடுதாதீங்க. வீட்டுல சும்மா உட்கார்ந்து மூலிகைகளை போட்டு லெமன் டீ குடிங்க, ஆவி புடிங்க.
இவ்வாறு வடிவேலு பேசி இருக்கிறார்.