வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
தமிழ் டிவி நிகழ்ச்சிகளில் கடந்த நான்கு வருடங்களாக அதிக பாப்புலரான நிகழ்ச்சிகளில் ஒன்று கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ். முதல் சீசனுக்குப் பிறகு அடுத்து ஒளிபரப்பான இரண்டாவது, மூன்றாவது மற்றும் மூன்றாவது சீசன்கள் ஆரம்பமாவதற்கு முன்பு கமல்ஹாசன் அவற்றைத் தொகுத்து வழங்குவாரா இல்லையா என்ற கேள்வி எழுந்தது.
ஆனாலும், கமல்ஹாசன் நான்கு சீசனையும் இடைவிடாமல் தொகுத்து வழங்கினார். இந்த வருடம் ஒளிபரப்பாக உள்ள ஐந்தாவது சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா என்ற சந்தேகம் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதற்கு முன்பு வேண்டுமானால் இருந்திருக்கலாம்.
தேர்தலில் கமல்ஹாசன் தோல்வியடைந்த பிறகு எப்படியும் அவர்தான் ஐந்தாவது சீசனைத் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும். ஐந்தாவது சீசனையும் அவரே தான் தொகுத்து வழங்குவார் என்ற உறுதியான தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
சமீபத்தில் அவரது கட்சியிலிருந்து விலகி முக்கிய நிர்வாகி ஒருவர் டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், கடந்த மார்ச் மாதமே பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்காக கமல்ஹாசன் அட்வான்ஸ் வாங்கிவிட்டதாகச் சொன்னார். அந்தத் தொகையை தேர்தலுக்கு முந்தைய கட்சி செலவுகளுக்குக் கொடுத்தாகவும் அவர் கூறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன்பே கட்சி செலவுகளுக்காக கமல்ஹாசன் அட்வான்ஸ் வாங்கிவிட்டார். எனவே, இந்த வருடத்தின் ஐந்தாவது சீசனையும் அவர்தான் தொகுத்து வழங்குவார். ஆனால், நிகழ்ச்சி எப்போது ஆரம்பமாகும் என்பதுதான் கேள்வி. கடந்த வருடம் போலவே அக்டோபர் மாதம் ஆரம்பமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.