பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை | ஆன்லைன் முன்பதிவு டிரெண்டிங்கில் முந்தும் 'ஹிட் 3' | ஏஐ தொழில்நுட்பத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் 'நாவாய்' | 'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர் - கவுதம் மேனனையே கலாய்ச்சிட்டீங்களே… | பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி, குஷி இருவரும் அப்பாவுடன் மும்பையில் வசித்து வருகிறார்கள். ஜான்வி ஹிந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரை தெலுங்குப் படங்களில் நடிக்க வைக்க வேண்டுமென பலரும் முயற்சித்து வருகிறார்கள்.
நடிகையாக இருந்தாலும் ஜான்வி கடந்த சில வாரங்களாகவே மும்பை வீதிகளில் சைக்கிளிங் சென்று வருகிறார். அவருடன் தங்கை குஷி மற்றும் சில நண்பர்கள் வருகிறார்கள். பிஸியான வீதிகளில் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு, ஹெட்போன் மாட்டிக் கொண்டு சைக்கிளிங் செல்லும் ஜான்வியை 'பப்பராசி' புகைப்படக்காரர்கள் விடாமல் துரத்திச் சென்று புகைப்படம் எடுக்கிறார்கள்.
அவர்களிடம் “இது ஆபத்தானது, இப்படியெல்லாம் எடுக்காதீர்கள்,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார். அவருடைய தங்கை குஷியும் அவர்களிடம், “எங்களுக்கும் கொஞ்சம் தனிமையைக் கொடுங்கள்,” என்று கேட்கிறார். அவர்கள் இருவரும் இப்படி பேசும் வீடியோ பதிவை ஒரு பிரபல புகைப்படக்காரர் அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுளளார். அதையே 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளார்கள்.
பாலிவுட்டில் 'பப்பராசி' புகைப்படமெடுப்பவர்கள் நடிகைகள் எங்கு சென்றாலும் அவர்களைப் பின் தொடர்ந்து புகைப்படங்களை எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் வழக்கமாக செல்லும் இடங்களில் பல புகைப்படக்காரர்கள் காத்திருப்பார்கள்.