'மதராஸி'யில் வட இந்தியர், தென் இந்தியர் மோதலா? : ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆரின் 'இதயக்கனி'க்கு இன்று பொன்விழா | பேண்டஸி படமாக 'விஸ்வம்பரா' | தமிழ் படத்தில் இங்கிலாந்து நடிகை | நடிகை பாலியல் குற்றச்சாட்டு : கேரள இளைஞர் காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ | பிளாஷ்பேக் : அவமானங்களை வெகுமானமாக்கி வென்ற சிரஞ்சீவி | ரஜினிகாந்த் 50 : விழா நடத்துமா தமிழ்த் திரையுலகம்? | தள்ளிப் போகிறது 'டுயூட்' | மீண்டும் விஷால், அஞ்சலி கூட்டணி | சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் |
80களின் கனவு கன்னி ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் 'தடாக்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி பின்னர் கோஸ்ட் ஸ்டோரி, குஞ்சன் சக்சேனா, மிலி ஆகிய படங்களில் நடித்தார். 'தேவரா' என்ற தெலுங்கு படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவுக்கு வந்திருக்கிறார். இதில் அவர் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக நடிக்கிறார். 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு பிறகு ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படம் இது.
இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார், சைப் அலிகான் வில்லனாக நடிக்கிறார், இவர்கள் தவிர பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், நரேன், கலையரசன், முரளி சர்மா, அபிமன்யு சிங் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார், ஆர்.ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்கிறார். பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது.
இந்த நிலையில் ஜான்வி கபூரின் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர். அதில் அவர் தங்கம் என்ற கேரக்டரில் நடிப்பதாக தெரிவித்துள்ளனர். அவரின் தோற்றத்தை பார்த்து பாராட்டி வரும் நெட்டிசன்கள் ஒரு கோணத்தில் அவர் ஸ்ரீதேவியை நினைவூட்டுவதாக கூறி வருகிறார்கள். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி வெளிவருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.