வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
லோகேஷ் கனகராஜ் தான் இயக்கிய விக்ரம் படத்தில் அதற்கு முன்பு அவர் இயக்கிய கைதி பட கதாபாத்திரங்களை அழகாக உள்ளே நுழைத்து ஆச்சரியப்படுத்தினார். அதற்கு எல்சியு என ரசிகர்களே பெயர் சூட்டி, அடுத்து விஜய்யின் லியோ படம் வெளியாவதற்கு முன்பு கூட அதிலும் கைதி, விக்ரம் கனெக்சன் எப்படியெல்லாம் இருக்கும் என ஆருடம் கூறி வந்தனர். அதற்கேற்றபடி லியோ படத்தின் இறுதியில் கமல்ஹாசன் விஜய்யுடன் பேசுவது போன்று படத்தை முடித்து எல்சியுவை தொடர்புபடுத்தி இருந்தார் லோகேஷ் கனகராஜ்.
அதேசமயம் ரசிகர்களாகவே இந்த படத்தில் எல்சியு தொடர்பாக வேறு என்ன அம்சங்கள் இருக்கின்றன என யோகித்து நாளுக்கு நாள் ஒரு புதுக்கதை சொல்லி வருவது தன்னை ஆச்சரியப்படுத்துகிறது என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். அப்படி தன்னை ஆச்சரியப்படுத்திய தியரி ஒன்று பற்றி அவர் கூறும்போது, தன்னுடைய படங்களில் அனாதை ஆசிரமங்கள் தொடர்ந்து முக்கிய இடத்தை பிடித்து வருகின்றன என்பதை குறிப்பிட்டார்.
அப்படி விக்ரம் படத்தில் பஹத் பாசில் தான் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்ததாக கூறினார். அவர் குறிப்பிட்டது சத்தியமங்கலம் பகுதியில் உள்ள அனாதை ஆசிரமம் ஒன்றின் பெயரை. அங்கிருந்துதான் தனது காதலியான காயத்ரியை அவர் காதலிக்க துவங்கினார் என்று கூறினார். அதேபோல லியோ படத்தில் விஜய் தான் லியோ அல்ல என்றும் தான் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவன், அதன்பிறகு திரிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டேன் என்று கூறும்போது அவரும் இதேபோன்று அந்த சத்தியமங்கலம் அனாதை ஆசிரமத்தின் பெயரைத்தான் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து இந்த இருவருக்குமே அந்த ஆசிரமம் பொதுவான ஒரு தொடர்பாக இருந்திருக்கிறது என்று ரசிகர்கள் சிலர் கூறியதாக லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். அது மட்டுமல்ல ஒருவேளை விஜய் உண்மையிலேயே அந்த படத்தில் லியோவாக இருந்து தன்னை வேறு ஒரு நபராக அதாவது பார்த்திபனாக மாற்றிக் கொண்டதற்கு பின்னணியில் பஹத் பாசில் தான் வளர்ந்த சத்தியமங்கலம் அனாதை ஆசிரமத்தின் தகவல்களை தந்து உதவி இருக்கலாம் என்றும் அவர்கள் கூறிய தியரி தன்னை ஆச்சரியப்படுத்தியதாக கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.