சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை | மீடியாவுக்கு குட்பை சொன்ன சுந்தரி நடிகை | அஜித் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த விக்னேஷ் சிவன் | மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? |
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் ஹிந்தியில் தயாரித்து வரும் படம் மைதான். ஹிந்தியில் தயாராகும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் டப்பாகி வெளியிடப்பட உள்ளது. அமித் ஷர்மா இயக்கத்தில் அஜய் தேவ்கான் நடித்து வருகிறார். இந்த படம் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
கடந்த ஆண்டே படத்துக்காக மும்பையில் பிரம்மாண்ட கால்பந்தாட்ட மைதான அரங்குகளை அமைத்து படமாக்கி வந்தனர். அப்போது ஏற்பட்ட கொரோனா முதல் அலை பாதிப்பினாலும் மும்பையில் பெய்த பெரும் மழையாலும் இந்த அரங்குகள் அகற்றப்பட்டு படப்பிடிப்பும் தற்காலிமாக நிறுத்தப்பட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மீண்டும் அதே இடத்தில் அரங்குகளை அமைத்து படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த முறையும் மைதானத்துக்கு புயல் வடிவில் சோதனை வந்தது. அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான டாக்டே புயல் கரையைக் கடந்தபோது குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கடுமையான மழை பெய்தது.
இதனால் பல இடங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. கடும் காற்றுடன் மழை பெய்ததில் மைதான் படத்துக்காக போடப்பட்டிருந்த பிரம்மாண்ட அரங்குகள் பலத்த சேதமடைந்தன. "மழை பெய்த அன்று அரங்கில் 40க்கும் அதிகமானோர் பணியில் இருந்தார்கள், ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை . என்றாலும் 2 கோடி ரூபாய் வரை தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது" என்ற தயாரிப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.