பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன். யுத்தம் செய் படத்தின் மூலம் அறிமுகமான இவர் முகமூடி, மாயா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, மாஸ்டர், சுல்தான் படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். படத்தின் டீசரிலேயே ஒளிப்பதிவு பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது சத்யன் சூரியன் விக்ரம் படத்திலிருந்து விலகி விட்டார்.
ஏற்கெனவே திட்டமிட்டபடி விக்ரம் படம் தொடங்கப்பட்டிருந்தால் இப்போது அதன் பணிகள் முடிந்திருக்கும் அதை மனதில் வைத்து தெலுங்கு படம் ஒன்றுக்கு தேதி கொடுத்திருந்தாராம் சத்யன். கமல்ஹாசனின் அரசியல் பணிகள், கொரோனா ஊரடங்கு இவற்றின் காரணமாக படத்தின் பணிகள் தொடங்கப்படாததால் விக்ரம் படத்திலிருந்து சத்யன் விலகி விட்டதாக கூறப்படுகிறது.
சத்யன் சூரியனுக்கு பதிலாக விக்ரம் படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு, தமிழில் விஜய் நடித்த சர்கார் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.




