300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
தமன்னா நடித்துள்ள புதிய வெப் தொடரான நவம்பர் ஸ்டோரி ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் தமன்னாவுடன் பசுபதி, விவேக் பிரசன்னா, அருள்தாஸ், ஜி.எம்.குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். ராம் சுப்பிரமணியம் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். 7 எபிசோட்களை கொண்ட இந்த தொடர் சஸ்பென்ஸ் க்ரைம் திரில்லர்.
இதுகுறித்து தமன்னா கூறியிருப்பதாவது: நான் வெப் தொடரில் நடிப்பது சினிமாவை பாதிக்குமா என்ற கேள்வியை கேட்கிறார்கள். ஒரு கலைஞருக்கும், ரசிகருக்கும் எப்போதும் ஒரு தொடர்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும். இப்போது அந்த தொடர்பு சாதனமாக இருப்பது ஓடிடி தளங்களும், அதில் வெளிவரும் வெப் சீரிஸ்களும்தான். நாளை வேறு தளம் ஏதாவது வந்தால்கூட அதில் நான் நடிப்பேன்.
இந்த தொடரில் நான் அனுராதா என்ற இளம் கம்ப்யூட்டர் நிபுணராக நடிக்கிறேன். எனது தந்தை ஒரு எழுத்தாளர். அவர் அல்சைமர் என்ற ஞாபக மறதி நோயால் அவதிப்படுகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்க நிறைய பணம் தேவைப்படுகிறது. இதனால் நாங்கள் குடியிருக்கும் வீட்டை விற்க முயற்சிக்கிறேன். ஒரு நாள் எங்கள் வீட்டிற்குள் ஒரு இளம் பெண் 43 இடங்களில் குத்தப்பட்டு இறந்து கிடக்கிறாள். அவளை கொன்றது என் தந்தைதான் என்று போலீஸ் கருதுகிறது.
ஞாபக மறதி நோய் உள்ளதால் கொன்றது தானா இல்லையா என்கிற சந்தேகம் அவருக்கே இருக்கிறது. ஆனால் என் தந்தை கொன்றிருக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன். அதனால் அந்த கொலையை செய்தவர் யார் என்பதை எனது கம்ப்யூட்டர் அறிவை வைத்து கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். இறுதியில் என்ன நடக்கிறது என்பது மாதிரியான கதை.
ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பாக இருக்கும். மொத்த எபிசோட்டையும் ஒரே மூச்சில் பார்க்க வைக்கும் விதத்தில் உருவாகி உள்ளது. இந்த தொடரில் நான் தமன்னாவாக தெரிய மாட்டேன். அனுராதாவாகத்தான் தெரிவேன். அந்த அளவிற்கு முழு ஈடுபாட்டுடன் இதில் நான் நடித்திருக்கிறேன். என்றார்.