லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பிரபல பாடகி ஜோனிடா காந்தி. கனடாவில் பிறந்து வளர்ந்த டெல்லி பொண்ணு. ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். அதன்பிறகு ஏராளமான இசை ஆல்பங்களிலும், இந்தியாவில் பல மொழிகளிலும் பாடி உள்ளார். தமிழிலும் நிறைய படங்களில் பாடி உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட டாப்பு டக்கர் என்ற ஆல்பத்தில் பாடி உள்ளார். இதுதவிர சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா செல்லம்மா பாடலையும் பாடி உள்ளார்.
தற்போது விக்னேஷ் சிவன் தயாரிக்கும் 'வாக்கிங் டாக்கிங் ஸ்டராபெர்ரி ஐஸ்கிரீம்' என்ற படத்தில் ஹீரோயினாக களமிறங்குகிறார். நாயகனாக 'சூரரைப்போற்று' படத்தில் நடித்துள்ள கேகே நடிக்கிறார். விக்னேஷ் சிவன் உதவியாளர் வி.விநாயக் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியது.