லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழ்த் திரையுலகில் கடந்த 24 வருடங்களாக முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பாக யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த தனியிசைப் பாடலான 'டாப் டக்கர்' பாடல் யு டியுபில் வெளியிடப்பட்டது. அந்தப் பாடலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இரண்டு வாரங்களில் அப்பாடல் 5 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
யுவன் இதுவரையிலும் ஒரே ஒரு ஹிந்திப் படத்திற்குத்தான் அனைத்துப் பாடல்களுக்கும் இசையமைத்திருக்கிறார். 2014ம் ஆண்டு வெளிவந்த 'ராஜா நட்வர்லால் படம்தான் அது. அதற்குப் பின் அவர் எந்த ஒரு ஹிந்திப் படத்திற்கும் இசையமைக்கவில்லை.
தற்போது 'டாப் டக்கர்' பாடல் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதால் அவருக்கு மீண்டும் ஹிந்திப் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தமிழில் 'வலிமை, மாநாடு, நானே வருவேன்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார் யுவன்.