நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
விக்ரமன் இயக்கத்தில், எஸ்ஏ ராஜ்குமார் இசையமைப்பில், விஜய், சங்கீதா மற்றும் பலர் நடித்து 15 பிப்ரவரி 1996ம் ஆண்டு வெளிவந்த படம் 'பூவே உனக்காக'.
அந்தப் படம்தான் விஜய்யை அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் ஒரு நடிகராக மாற்றியது. அதற்கு முன்பு வரை விஜய் நடித்த படங்களை பெண்களும், குடும்பத்தினரும் பார்க்க மாட்டார்கள். அதற்கு முந்தைய விஜய் படங்கள், கொஞ்சம் இரட்டை அர்த்த வசனங்கள், சில ஆபாசக் காட்சிகள் நிறைந்த படமாகத்தான் இருந்தன.
அவரை அப்படியே 'பூவே உனக்காக' படத்தில் மாற்றினார் இயக்குனர் விக்ரமன். சொல்லப் போனால், விஜய் நடித்த படம் ஒன்றை முதன் முதலாக பல ரசிகர்கள் பார்த்தது அந்தப் படமாகத்தான் இருக்கும்.
ஒரு அருமையான இயல்பான காதல் கதையாக வெளிவந்த படம் பெரும் வெற்றியைப் பெற்றது. படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே சூப்பர்ஹிட்டாக அமைந்தன.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் காதலைப் பற்றி விஜய் பேசிய வசனங்கள் இன்றைக்கும் 70ஸ் கிட்ஸ், 80ஸ் கிட்ஸ் மனதில் நீங்கா இடம் பிடித்தவையாக இருக்கும்.
'பூவே உனக்காக' படத்திற்குப் பிறகுதான் விஜய் தனக்கான ஒரு இமேஜை உருவாக்கி அதன்பின் அதை இன்னும் வளர்க்கும் விதத்தில் தன்னுடைய படங்களை மாற்றிக் கொண்டார். இன்று தமிழ் சினிமாவில் டாப் 5 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
அந்த 'பூவே உனக்காக' படம் வெளிவந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.