பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜ் என அழைக்கப்படும் நடிகர் ரவிதேஜா கடந்த சில வருடங்களாகவே தனது திரையுலக பயணத்தில் இறங்கு முகத்தில் இருந்து வருகிறார். இந்தநிலையில் தான், அவர் ஹீரோவாக நடித்துள்ள 'கிராக்' என்கிற படம் கடந்த வாரம் வெளியானது. இயக்குனர் கோபிசந்த் மாலினேணி இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகிகளாக ஸ்ருதிஹாசன் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிக்க, முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார்
வாழ்வா சாவா என்கிற நிலையில் இந்தப்படத்தின் ரிசல்ட்டை எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரவிதேஜாவை சீராக மூச்சுவிட வைத்திருக்கிறது இந்தப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.. அதுமட்டுமல்ல, 16.5 கோடியில் உருவான இந்தப்படம் கடந்த ஒரு வாரத்திலேயே சுமார் 23 கோடி வசூலித்து விநியோகஸ்தர்களையும் திரையரங்கு உரிமையாளர்களையும் குஷிப்படுத்தியுள்ளது. அந்தவகையில் வசூலில் ரவிதேஜா மீண்டும் மாஸ் மகாராஜ் தான் என அவரை தலைநிமிர செய்துள்ளதாம் இந்த கிராக்