செல்போனை பறித்தாரா அக்ஷய் குமார் ? உண்மையை வெளியிட்ட லண்டன் ரசிகர் | 'டகோய்ட்' படப்பிடிப்பில் ஆத்வி சேஷ்-மிருணாள் தாக்கூர் காயம் | ஜிம்முக்கு போகாமலேயே 26 கிலோ எடை குறைத்த போனி கபூர் | ரஜினியின் 'கூலி': அமெரிக்காவில் ஐந்தே நிமிடத்தில் 15 லட்சம் ரூபாய்க்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன! | மாரீசன் பற்றி மனம் திறந்த பஹத் பாசில் | திருமணம் எப்போது? நித்யா மேனன் சொன்ன பதில் | செப்டம்பரில் தொடங்கும் 'பிக்பாஸ் சீசன்-9' | என்னால் 12 மணிநேரம் கூட பணிபுரிய முடியும்! - நடிகை வித்யா பாலன் | தீபாவளி ரிலீஸ் தேதியை திட்டமிடும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | 'மார்கன்' முதல் 'கண்ணப்பா' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ்...! |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகனாக விளங்கும் மகேஷ்பாபுவுக்கு, அவரது திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படங்கள் தான் ஒக்கடு மற்று போக்கிரி. இதில் ஒக்கடு படம் வெளியாகி நேற்றுடன் 18 வருடங்கள் முடிவடைந்து விட்டது. குணசேகர் இயக்கத்தில் மகேஷ்பாபு, பூமிகா, பிரகாஷ்ராஜ் நடித்த இந்தப்படத்தை தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜூ தயாரித்திருந்தார். இந்தப்படம் தான் பின்னாளில் விஜய் நடிக்க 'கில்லி'யாக ரீமேக் ஆனது.
ஒக்கடு படத்தின் 18ஆம் வருட கொண்டாட்ட புகைப்படத்தை மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா சிரோத்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஆனால் அதில் தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜூ பெயரை குறிப்பிட மறந்துவிட்டார். இது தயாரிப்பாளரை ரொம்பவே வருத்தப்பட வைத்துவிட்டது..
“தவறுகள் நிகழ்வது சகஜம் தான் பாபு.. 18ஆம் வருட கொண்டாட்டத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டபோது நம்ரதா என் பெயரை குறிப்பிட மறந்துவிட்டார்.. ஆனாலும் அவரது பேவரைட் படம் இதுதான் என குறிப்பிட்டுள்ளாரே, அதுவே எனக்கு மகிழ்ச்சி தான்” என அதுகுறித்து வருத்தப்பட்டு பதிவிட்டிருந்தார் தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜூ.
அதை தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட நம்ரதா, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தயாரிப்பாளர் எம்.எஸ்.ராஜூ பெயரையும் சேர்த்துக்கொண்டுள்ளார்.