12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் | பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம் | 'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் |
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வரும் படம் லாபம். விஜய்சேதுபதி இதனை தயாரித்து, நடிக்கிறார். அவருடன் ஸ்ருதிஹாசன், கலையரசன், சாய் தன்ஷிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். இது விவசாய பிரச்சனையை அடிப்படையாக கொண்ட படம்.
கொரோனா காலத்திற்கு முன்பு 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்திருந்து. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கி வேகமாக நடந்து வந்தது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கிருஷ்ணகிரி பகுதியில் நடந்தது. அந்த பகுதியில் படப்பிடிப்பு நடப்பது அபூர்வம் என்பதால் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். இதனால் சரியான கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று ஸ்ருதிஹாசன் படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
இதனால் ஸ்ருதிஹாசன் இல்லாத காட்சிகளை படமாக்கிவிட்டு படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பினர். ஆனால் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் பாக்கி இருக்கிறது. அதை முடித்தால்தான் படத்தை முடிக்க முடியும் என்கிறார்கள். மீண்டும் கிருஷ்ணகிரி சென்று படப்பிடிப்பு நடத்துவது சாத்தியமில்லை என்பதால் சென்னை புறநகர் ஒன்றில் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரே நாளில் அவர் காட்சிகளை எடுத்து முடிக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த ஒரு நாளைக்கு இன்னும் ஸ்ருதி தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை என்று கூறப்படுகிறது.