பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டு கிடந்தது. ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக 50 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க அரசு அனுமதித்தது. ஆனால் தியேட்டர்களில் பெரிய படங்கள் வெளிவரவில்லை. மக்களும் தியேட்டருக்கு ஆர்வமாக செல்லவில்லை.
இந்த நிலையில் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13ந் தேதி மாஸ்டர் படம் வெளிவருவதால் விஜய்யின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி அளித்தது. பல்வேறு தரப்பின் எதிர்ப்புகளை தொடர்ந்து இந்த அறிவிப்பை வாபஸ் பெற்றது. இந்த நிலையில் கமல்ஹாசன் அரசின் 50 சதவிகித இருக்கை முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை முடித்து கொண்டு நேற்று சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இதுகுறித்து கூறும்போது "தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைக்கு மட்டும் அனுமதி அளித்திருப்பது ஆரோக்கியமான முடிவு. தொழிலும் நடக்க வேண்டும், அதே நேரத்தில் மக்களின் ஆரோக்கியமும் முக்கியம். எனவே இந்த முடிவு, நல்ல முடிவு. இதனை நான் வரவேற்கிறேன். என்றார்.