ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ஜனநாயகன். அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன், ஸ்ருதிஹாசன், பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 2026ம் ஆண்டு ஜனவரியில், பொங்கல் முன்னிட்டு திரைக்கு வருகிறது. இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் ஆடியோ விழாவை வருகிற டிசம்பர் மாதம் இறுதியில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்கள். இந்த விழா சென்னையில் நடைபெறவில்லை. மலேசியாவில் நடைபெறப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜனநாயகன் விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமல், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். என்றாலும், இந்த நடிகர்கள் தங்கள் படங்களின் விழாக்கள் தவிர மற்ற விழாக்களில் பங்கேற்பதில்லை. அதிலும் அஜித் குமார் தன்னுடைய படத்தின் ஆடியோ விழாவிலேயே கலந்து கொள்ள மாட்டார். அப்படி இருக்கும்போது இந்த பிரபல நடிகர்களில் விஜய் படத்தின் ஆடியோ விழாவில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பது அப்போதுதான் தெரியவரும்.




