விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? |

கடந்த 2021ம் ஆண்டில் சதீஷ் செல்வக்குமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி ஆகியோர் நடித்து வெளியான படம் 'பேச்சுலர்'. இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற இந்தபடம் சில விமர்சனங்களையும் சந்தித்தது. இந்த படத்திற்கு பிறகு இந்த இயக்குனரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் சதீஷ் செல்வக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படத்திற்கு '18 மைல்ஸ் (தாரணா)' என தலைப்பு வைத்துள்ளனர். இதன் முதல் பார்வையையும், முன்னோட்ட வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இதில் முதன்மை கதாபாத்திரங்களில் அசோக் செல்வன் மற்றும் மிர்ணா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். சித்து குமார் இசையமைத்துள்ளார். இது ஒரு காதல் படமாக உருவாகி உள்ளது. கப்பல் படையில் வேலை பார்க்கும் அதிகாரியாக அசோக் செல்வன் நடித்துள்ளார். அவரின் காதலியாக மிர்ணா நடித்துள்ளார். இருவருக்குமான காதலை இதுவரை பார்த்திராத வேறு ஒரு கதைக்களத்தில் இயக்குனர் சொல்லப் போகிறார்.




