பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த. ரஜினியுடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசைய மைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் தொற்றினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 14-ந்தேதி மீண்டும் தொடங்கியது. ஆனால் எதிர்பாராதவிதமாக படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதோடு ரஜினியும் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக சிகிச்சை எடுத்ததால் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து அப்படக்குழு வட்டாரங்களில் விசாரித்தபோது, தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்த பிறகு ஜூன் மாதம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள். முக்கியமாக அந்த சமயத்தில் இந்தியா முழுக்க கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு ஊசியும் போடப்பட்டு விடும் என்பதால் அப்போது நடக்கும் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மீண்டும் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கிறார்கள்.