25 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 1 ரூபாய் அட்வான்ஸ் | சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூ இயர்' பாடலை படமாக்கிய மூத்த ஒளிப்பதிவாளர் பாபு காலமானார் | டிச., 25ல் சிறை ரிலீஸ் : உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட விக்ரம் பிரபு படம் | இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி |
கிரிக்கெட் வீரர்களையும், சினிமாவையும் அவ்வளவு சீக்கிரம் பிரிக்க முடியாது. சில கிரிக்கெட் வீரர்கள் சினிமா நடிகைகளைத்தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். கிரிக்கெட் வீரர்களையும், நடிகைகளையும் இணைத்து பல காதல் கிசுகிசுக்கள் வந்ததுண்டு.
கிரிக்கெட் வீரர்கள் பலரும் விளம்பரப் படங்களில் நடித்தே கோடி கோடியாக சம்பாதித்துள்ளார்கள். ஆனால், சினிமாவில் நடிக்க அவர்கள் அதிக ஆர்வம் காட்டியதில்லை.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான குஜராத்தைச் சேர்ந்த இர்பான் பதான் 'கோப்ரா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். சில தினங்களுக்கு முன்பு வெளியான அந்த டீசர் 10 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இப்படத்தில் நடிகராக அறிமுகமாகும் இர்பான் பதானுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விவிஎஸ் லட்சுமண், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் அவருடைய சினிமா அறிமுகத்தை பாராட்டியுள்ளனர்.
இர்பான் பதானைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் 'டிக்கிலோனா, பிரண்ட்ஷிப்' ஆகிய மிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். இரண்டுமே விரைவில் வெளியாக உள்ளது.