ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு |
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் செல்வராகவன். தற்போது தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இது தவிர சாணிக்காயிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகை சோனியா அகர்வாலை சட்டப்படி பிரிந்த பின்னர் மயக்கம் என்ன படத்தில் தன்னுடன் பணிபுரிந்த உதவி இயக்குனர் கீதாஞ்சலி என்பவரை 2011ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும், ஓம்கர் என்ற மகனும் உள்ள நிலையில் கீதாஞ்சலி மூன்றாவது முறையாக கர்ப்பமானார். கர்ப்பகாலத்தில் விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தினார் கீதாஞ்சலி. சமீபத்தில் புத்தாண்டையும் வெகு சிறப்பாக கொண்டாடினார். இந்நிலையில் இன்று(ஜன., 7) காலை செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதிக்கு 3வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ரிஷிகேஷ் என பெயரிட்டுள்ளனர். தாயும், சேயும் நலமாக உள்ளனர். இந்த தம்பதியருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.