'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேரி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது | சூரி படத்துக்கு ஓடிடி-யில் இழுபறி |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்துக்கு சிறப்பான பின்னணி இசையை கொடுத்து பாராட்டுக்களை பெற்றார் ஜி.வி.பிரகாஷ் குமார். இதன் காரணமாக அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்திற்கும் அவர் கமிட்டாகி இருக்கிறார். அதோடு சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 வது படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கிறார்.
இப்படியான நிலையில் செல்வராகவன் இயக்கும் புதிய படத்திற்கும் தான் இசையமைக்கபோவதாக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார் ஜி.வி .பிரகாஷ். அந்த பதிவில், செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களை தொடர்ந்து அவர் இயக்கும் புதிய படத்தின் மூலம் மூன்றாவது முறையாகவும் இணைய போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
செல்வராகவன் இயக்கும் இந்த புதிய படம் குறித்த அறிவிப்பு நாளை மாலை 6:30 மணிக்கு வெளியாக உள்ளது.