32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
பிரதர் படத்தை அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் சீனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. இந்த நிலையில் அடுத்தபடியாக கவுதம் மேனன் இயக்கும் ஒரு படத்தில் அவர் நடிக்கப் போகிறார். தற்போது மம்முட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் என்ற படத்தை இயக்கி வரும் கவுதம் மேனன், அந்த படத்தை அடுத்து வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கப் போகிறார்.
இந்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த படத்தில் ஜெயம் ரவி நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் கவுதம் மேனனும், ஜெயம் ரவியும் முதன் முறையாக இணையப் போகிறார்கள்.
ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்த நிலையில், சம்பள விவகாரத்தில் சிம்புவுக்கும் அந்த நிறுவனத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதன் காரணமாகவே மீண்டும் அதே நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க கவுதம் மேனன் அழைப்பு விடுத்தபோது அதை சிம்பு நிராகரித்து விட்டதாகவும், அதனால் ஜெயம் ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.