பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி, அதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து பட குழுவினர் சென்னை, ஐதராபாத், மும்பை, கொச்சி உள்ளிட்ட இடங்களில் இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இந்த நிலையில் தற்போது பெங்களூருவில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றபோது அதில் பேசிய ஜெயம் ரவி, அங்கு கிடைத்த ரசிகர்களின் வரவேற்பை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு சில நொடிகள் கண் கலங்கினார்.
இதைத் தொடர்ந்து அருகில் இருந்த கார்த்தி, விக்ரம், திரிஷா ஆகியோர் ஜெயம் ரவியை தேற்றி ஆசுவாசப்படுத்தினர். இதற்கு முன்னதாக ஜெயம் ரவிக்கு தனி ஒருவன் படத்தில் நடித்தபோது மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அடுத்தடுத்து அவர் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த பொன்னியின் செல்வன் படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் இவர் நடித்து அதற்கு ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை நேரில் கண்கூடாக கண்டபோது தன்னையும் அறியாமல் மனம் நெகிழ்ந்து கண்கலங்கி விட்டாராம் ஜெயம் ரவி.