அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
சமந்தா நடிப்பில் குணசேகர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சாகுந்தலம். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு படம் மிகப்பெரிய வரவேற்பை பெறவில்லை. குறிப்பாக யசோதா படத்திற்கு கிடைத்த வெற்றி போல இதற்கும் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என நினைத்த சமந்தாவிற்கு இந்த படத்தின் ரிசல்ட் ஷாக்கிங் ஆகத்தான் இருந்திருக்கும். இது போதாதென்று தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் சிட்டிபாபு என்பவர் இந்த படம் குறித்தும், சமந்தா குறித்தும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
அதில் அவர் கூறும்போது, சமந்தாவின் மார்க்கெட் இனி அவ்வளவுதான்.. அவருடைய பணத்தேவைக்காகத்தான் புஷ்பா படத்தில் ஊ அண்டாவா என்கிற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார்.. தனது படங்களின் ரிலீஸ் சமயத்தில் எல்லாம் கண்ணீர் விட்டு சென்டிமென்டாக பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.. எல்லா நேரமும் அது ஒர்க் அவுட் ஆகாது: என்று கூறியிருந்தார். இதுபற்றி சமந்தா உடனடியாக பதிலடி கொடுக்கவில்லை.. ஆனால் தற்போது அந்த தயாரிப்பாளரின் பெயரை குறிப்பிடாமல் அதே சமயம் அவருக்கு கிண்டலாக மறைமுக பதிலடி கொடுத்துள்ளார் சமந்தா.
சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்கிரீன் ஷாட் ஒன்றை ஷேர் செய்து இருந்தார். “எப்படி மனிதர்கள் காதுகளில் முடி வளர்க்கிறார்கள்” என்பது பற்றிய கூகுள் தேடலின் ஸ்கிரீன் ஷாட் தான் அது. எதற்காக இதை சமந்தா ஷேர் செய்துள்ளார் என பலருக்கும் குழப்பம் ஏற்படலாம்.. சமந்தாவை விமர்சித்த தயாரிப்பாளர் சிட்டிபாபுவின் காதுகளில் அதிக அளவில் முடி வளர்ந்து இருக்கும்.. இதனை சுட்டிக்காட்டி அவரை கிண்டலடிக்கும் விதமாகவே இப்படி ஒரு கூகுள் தேடல் ஸ்க்ரீன் ஷாட்டை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு பதிலடி கொடுத்துள்ளார் சமந்தா என்று நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.