இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மறைந்த எழுத்தாளர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவல், தற்போது அதே பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படம் இருபாகங்களாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார.
பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன, நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான வித்யா சுப்ரமணியன் இந்த படத்திற்கான டப்பிங் பேசும் பணிகளை முதன் முதலாக தொடங்கினார். பின் நடிகை த்ரிஷா டப்பிங் பேசி முடித்தார்.
இந்நிலையில் நடிகர் கார்த்தியும், ஜெயம் ரவியும் டப்பிங் பேசி முடித்துள்ளனர் என நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த படத்தில் அருள் மொழி வர்மனாக ஜெயம் ரவி நடித்துள்ளார். வந்தியத்தேவனாக கார்த்தி நடித்துள்ளார்.