செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தமிழ் சினிமாவில் 90, 2000 ஆரம்ப காலகட்டத்தில் ஆக்ஷன் கிங் ஆக வலம் வந்தவர் அர்ஜூன். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக அர்ஜுன் கதாநாயகனாக நடிக்காமல் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு அர்ஜுன் மீண்டும் புதிதாக உருவாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இதனை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் சுபாஷ் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக ‛விருமாண்டி' அபிராமி நடிக்கிறார். இவர்களின் மகள் கதாபாத்திரத்தில் ‛ஸ்டார்' படத்தின் மூலம் பிரபலமான பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார் மற்றும் விவேக் பிரசன்னா, ஜான் கொக்கென், அர்ஜுன் சிதம்பரம், பவன், திலீபன், வினோத் சாகர் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு கே.ஜி.எப் இசையமைப்பாளர் ரவி பசூர் இசையமைக்கிறார்.