துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு முன்பு இளைஞர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட இயக்குனர்கள் செல்வராகவன், கவுதம் மேனன். இருவரது படங்களும் அந்தக் காலத்தில் ஒரு டிரென்ட் செட் செய்த படங்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. ஆனால், சமீப காலங்களில் அவர்களது இயக்கத்தில் வந்த படங்கள் சொல்லிக் கொள்ளும்ப்டி அமையவில்லை. அதே சமயம் அவர்கள் இருவருமே நடிகர்களாக பல படங்களில் நடித்து வருகிறார்கள்.
இருந்தாலும், சந்தானம் நாயகனாக நடிக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் கவுதம் மேனன், செல்வராகவன் இருவரும் நடிப்பது ரசிகர்களிடம் நேற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கவுதம் மேனன் இன்னுமா கடனாளியாக இருக்கிறார், கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடிக்கிறார் போலிருக்கிறதே என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.
செல்வராகன் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்க 'மன்னவன் வந்தானடி' என்ற படம் சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பமாகி அப்படியே நின்றுவிட்டது. இருவருக்கும் ஏற்கெனவே பழக்கம் உள்ளதால் சந்தானம் படத்தில் செல்வராகவன் நடிப்பது ஆச்சரியமாகப்படவில்லை. நடிகர்கள் என மாறிவிட்ட பிறகு யார் படத்தில் நடித்தால் என்ன, சம்பளம் கரெக்டாக வந்தால் சரி.