பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
கடந்த 2022ல் கன்னடத்தில் இயக்குனர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கி வெளியான 'காந்தாரா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்திற்கு தென்னிந்திய மொழிகளிலும் மற்றும் ஹிந்தியிலும் கூட மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து அடுத்ததாக ரிஷப் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை 'காந்தாரா சாப்டர் 1' என்கிற பெயரில் இயக்கி நடித்துள்ளார். வரும் அக்டோபர் 2ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான லிஸ்டின் ஸ்டீபன் மற்றும் நடிகர் பிரித்விராஜ் இருவரும் இணைந்து வாங்கியுள்ளனர். ஆனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு படத்தின் முதல் வாரத்தில் மட்டுமே 55 சதவீதம் பங்கு தருவேன் என பிடிவாதம் காட்டினார் லிஸ்டின் ஸ்டீபன்.
தியேட்டர் அதிபர்களோ இரண்டு வாரத்திற்கும் 55 சதவீத பங்கு வேண்டும் என கேட்டனர். இதனால் காந்தாரா 2 கேரளாவில் வெளியாவதில் ஒரு இழுபறி ஏற்பட்டது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்கம் இணைந்து நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டு இரண்டு வாரங்களுக்கும் தியேட்டர் அதிபர்களுக்கு 55 சதவீதம் பங்கு கொடுக்கப்படும் என லிஸ்டின் ஸ்டீபன் உறுதி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து பிரச்னை சுமூகமாக முடிவுக்கு வந்துள்ளது.