ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி | ஆஸ்கர் மியூசியத்தில் திரையிடப்படும் 'பிரம்மயுகம்' | மிடில் கிளாஸ் படம் எதை பேசுகிறது |

தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், அஜித்குமார், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'குட் பேட் அக்லி'. சுமார் 250 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்ததாக சொல்லப்படுகிறது.
அப்படத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல் தனது பாடல்களான 'ஒத்த ரூபாயும் தாரேன், இளமை இதோ இதோ, எஞ் ஜோடி மஞ்சக் குருவி' ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடுத்திருந்தார். அப்பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தது நீதிமன்றம்.
ஆனால், ஓடிடி தளங்களில் 'குட் பேட் அக்லி' படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடல்கள் நீக்கப்படவில்லை. அது குறித்த செய்தியையும் நாம் ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இளையராஜாவின் வழக்கறிஞர் உடனடியாக அப்பாடல்களை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.