பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லன் மற்றும் பலர் நடித்து வெளியான மலையாளப் படம் 'லோகா சாப்டர் 1 : சந்திரா'. அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனையைப் படைத்து வருகிறது. படம் வெளியான 19 நாட்களில் 250 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு வெளியான படங்களில் 'எல் 2 எம்புரான்' படம் 250 கோடிக்கும் சற்றே அதிகமான வசூலைக் குவித்தது. அந்த வசூலை 'லோகா' அடுத்த சில நாட்களில் முறியடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாளத் திரையுலகத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களில் 'லோகா' முதலிடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட ஆன்லைன் டிக்கெட் புக்கிங் இணையதளத்தில் மிக அதிக டிக்கெட்டுகளை புக் செய்த மலையாளப் படம் என்ற சாதனையை இந்தப் படம் புரிந்திருக்கிறது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அடுத்து இப்படம் 300 கோடி வசூலைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு மலையாளத் திரையுலகத்தில் எழுந்துள்ளது.