பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
மக்களிடம் வரவேற்பு பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த முறை தமிழில் துவங்குவதற்கு முன்பாகவே மலையாளத்திலும் தெலுங்கிலும் துவங்கிவிட்டது. மலையாளத்தில் தற்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி துவங்கி நடைபெற்று வருகிறது. ஏழு வருடங்களாக நடிகர் மோகன்லால் இந்த நிகழ்ச்சியை திறம்பட சுவாரசியமாக நடத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இந்த சீசனில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக லட்சுமி மற்றும் மஸ்தானி என்கிற இரண்டு பெண் போட்டியாளர்கள் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.
இதற்கு முன்னதாக ஆரம்பத்தில் இருந்தே பங்கேற்ற போட்டியாளர்களில் ஆதிலா மற்றும் நூரா என்கிற ஓரு பாலின தம்பதி ஒன்று ஜோடியாக இடம்பெற்றுள்ளனர். இந்த லட்சுமி மற்றும் மஸ்தானி இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் வரை அந்த ஜோடி குறித்து அங்கிருந்த யாருக்கும் எந்த விமர்சனமும் எழவில்லை. அனைவரிடமும் அவர்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் லட்சுமியும் மஸ்தானியும் உள்ளே நுழைந்த நாளில் இருந்து அவர்கள் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து பேசி வந்தார்கள்.. குறிப்பாக லட்சுமி, இவர்களைப் போன்றவர்களை நான் என் வீட்டுக்குள் நுழையவே விடமாட்டேன் என்பது போன்று கருத்துக்களை முன் வைத்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று சனிக்கிழமை இரவு மோகன்லால் போட்டியாளர்களிடம் பேசியபோது இந்த விவாதத்தை கையில் எடுத்தார்.
அப்போது பேசிய மோகன்லால், லட்சுமி மற்றும் மஸ்தானி இருவரையும் கடுமை காட்டி பேசினார். “இந்த சமூகத்தில் இது போன்ற ஒரே பாலின ஜோடிகளுக்கான அங்கீகாரத்தை நீதிமன்றமே வழங்கி இருக்கிறது. இந்த ஜோடி எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களாக கலந்து கொள்ள வந்திருக்கின்றனர். நீங்கள் இருவரும் இடையில் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்திருப்பவர்கள், இப்படி இருவர் இந்த வீட்டில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு அதை ஒப்புக்கொண்டு தானே இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறீர்கள். அப்படி வந்த பிறகு சக மனிதர்களான அவர்களை பற்றி எப்படி உங்களால் தரக்குறைவாக பேச முடிகிறது. இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்களுக்கு இங்கே இவர்களுடன் இருக்க விருப்பமில்லை என்றால் தாராளமாக நீங்கள் வெளியேறலாம்” என்று கடுமையாக கூறியதும் சக போட்டியாளர்களிடமும் அரங்கத்தில் இருந்தவர்களிடமும் கைதட்டல் அதிர்ந்தது.