மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

2009ல் வெளியான ‛வைகை' படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை சுவாசிகா. அதன்பின் சில படங்களில் நடித்தாலும் கடந்தாண்டு வெளியான ‛லப்பர் பந்து' அவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து மாமன், ரெட்ரோ போன்ற படங்களில் நடித்தார். தற்போது கருப்பு படத்தில் நடித்துள்ளார். சினிமா படங்கள், வெப்சீரிஸ் இரண்டிலும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்கிறார்.
சினிமாவில் நடக்கும் பாலியல் தொந்தரவு தொடர்பாக இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது ‛‛15 ஆண்டுகளாக இந்த துறையில் உள்ளேன். நான் அதுபோன்று எந்த பிரச்னையையும் சந்திக்கவில்லை. இந்த பிரச்னை சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் நடக்கிறது. இதை தடுக்க கடுமையான சட்டங்கள் வேண்டும். பெண்கள் வாழ்வில் முன்னேற தைரியமாக இருக்க வேண்டும். எந்த இடத்திலும் வளைந்து செல்லக்கூடாது. ஒருவராக தவறாக நடக்க முயன்றால் அவர்களை எதிர்கொள்ளவும், சமூகத்தின் முன் நிறுத்தவும் தயங்க கூடாது'' என்றார்.