ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
கடந்த வாரம் சூரி நடிப்பில் குடும்ப கதையம்சத்துடன் அதுவும் தாய்மாமன் என்கிற உறவு முறையை உயர்த்தி பிடிக்கும் விதமாக மாமன் என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் சூரியின் அக்காவாக சுவாசிகாவும், சூரியின் மனைவியாக ஐஸ்வர்ய லட்சுமியும் நடித்திருந்தனர். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்தார். லப்பர் பந்து படத்தில் நடித்ததன் மூலம் நடிகை சுவாசிகா இந்தப்படத்திலும் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அதேசமயம் ஐஸ்வர்ய லட்சுமிக்கும் படத்தில் குறை சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை. அவரும் நன்றாகவே நடித்திருந்தார்.
ஆனாலும் அவருக்கு தனது நடிப்பின் மீது கொஞ்சம் சந்தேகம் இருந்துள்ளது. ஒருநாள் நள்ளிரவு 3 மணி அளவில் சக நடிகையான சுவாசிகாவுக்கு மெசேஜ் செய்து, “நான் நல்ல நடிகை என்று நினைக்கிறீர்களா? இப்போது என்னுடைய வேலையை நான் சரியாக செய்து வருகிறேனா?” என்று கேட்டுள்ளார். இந்த தகவலை கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற மாமன் பட புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார் சுவாசிகா. அப்போது உடன் பங்கேற்ற நடிகர் சூரி, “இப்படி ஒவ்வொரு கலைஞர்களுக்கும் இதுபோன்ற சந்தேகங்கள் எழுவது இயல்பான ஒன்றுதான். ஐஸ்வர்ய லட்சுமி நிச்சயமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்” என்று தன் பங்கிற்கு பாராட்டை தெரிவித்தார்.