பாலாஜி சக்திவேல் ஜோடியான வீடு அர்ச்சனா | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக தானாகவே விநாயகர் சிலையை உருவாக்கிய பிரம்மானந்தம் | ஆஸ்கர் போட்டிக்கு தேர்வான மலையாள இயக்குனர் படம் | அமெரிக்காவிலிருந்து ஒன்றாக ஹைதராபாத் வந்திறங்கிய விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா | ‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் |
மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், சில வருடங்கள் படங்கள் எதுவும் நடிக்காமல் இருந்தார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‛பேட்ட', விஜய்யின் ‛மாஸ்டர்' என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று தென்னிந்திய அளவில் பிரபலமானார். அதன்பிறகு சில படங்களில் நடித்தாலும் இடையில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. அதை தொடர்ந்து கடந்த வருடம் வெளியான ‛தங்கலான்' படத்தின் மூலம் மீண்டும் விறுவிறுப்பாக தனது அடுத்த இன்னிங்ஸை துவங்கியுள்ளார்.
அந்த வகையில் தற்போது தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக ‛ராஜா சாப்' படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து ‛ஹிருதயபூர்வம்' என்கிற படத்திலும் நடித்து முடித்துவிட்டார். தமிழில் மித்ரன் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து ‛சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். சமீபத்தில் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடிய இவர், ‛‛சர்தார் 2 படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. வரும் ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும். தமிழில் அடுத்து நான் நடிக்கும் படம் குறித்து அதன் பிறகு அறிவிக்கிறேன்,'' என்று கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.