மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தமிழ் சினிமாவில் இன்றைய முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கியுள்ள 'கூலி' படம் இன்று வெளியாகிவிட்டது. இந்தப் படத்திற்குப் பிறகு அவர் கார்த்தி நடிக்க உள்ள 'கைதி 2' படத்தை இயக்கும் திட்டத்தில்தான் இருந்தார்.
ஆனால், அதற்கு முன்பாக அவர் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளதாகத் தகவல். தனுஷ் நடிக்க இளையராஜாவின் பயோபிக்கை அருண் மாதேஸ்வரன் இயக்குவதாக அறிவிப்புகள் வெளிவந்தது. ஆனால், அந்தப் படம் ஆரம்பமாகுமா என்பதே சந்தேகமாகிவிட்டது.
இயக்குனர்கள் பலரும் நடிகர்களாக மாறியதைப் போல லோகேஷுக்கும் அந்த ஆசை நீண்ட நாட்களாகவே இருக்கிறது என்கிறார்கள். குறுகிய தயாரிப்பாக இந்தப் படத்தில் நடித்த பிறகு 'கைதி 2' படத்திற்குப் போக உள்ளாராம். அந்தப் படத்தில் அவரது சம்பளம் உள்ளிட்ட பிற விஷயங்கள் குறித்து இன்னும் முடிவு எட்டப்படவில்லை என்கிறார்கள். அப்படத்திற்காக பெரிய பட்ஜெட்டைக் கொடுத்துள்ளாராம் லோகேஷ். அவற்றைத் தயார்படுத்தும் கால அவகாசத்துக்குள் லோகேஷ் நடிக்கும் படத்தை முடித்துவிடும் திட்டம் உள்ளதாம்.