கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! |

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் ஒன்றிணைத்து மூன்றரை மணி நேர படமாக வெளியிடப் போகிறார்கள். அதோடு, இந்த படத்தை ஏற்கனவே வெளியான படம் என்ற கோணத்தில் பார்க்காமல், ஒரு புதிய படத்தை வெளியிடுவது போலவே ஏற்கனவே இடம் பெற்ற காட்சிகளோடு புதிய காட்சிகளையும் இணைத்து இந்த ‛பாகுபலி தி எபிக்' படத்தை உருவாக்கி உள்ளார்கள். அது மட்டுமின்றி இந்த படம் குறித்த ஒரு ஆச்சரியமான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்கள். அதாவது பாகுபலி தி எபிக் படம் ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியிடப்படுவதாக அறிவித்துள்ளார்கள். பாகுபலி படத்தை இவ்வளவு பிரமாண்டமான வடிவத்தில் பார்ப்பது ரசிகர்களுக்கு புதிய விருந்தாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்கள். வருகிற அக்டோபர் 31ஆம் தேதி பல்வேறு மொழிகளிலும் வெளியாகும் இந்த பாகுபலி தி எபிக் படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கீரவாணி இசையமைத்துள்ளார்.