210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே | விக்ரம் 65வது படத்தை இயக்கும் ‛பார்க்கிங்' இயக்குனர் | நாகார்ஜுனா Vs ஜுனியர் என்டிஆர் - கூடுதல் பலத்தைக் கொடுக்கப் போவது யார் ? | சீக்கிரம் சசி உடன் மீண்டும் ஒரு படம் : விஜய் ஆண்டனி | இப்பவே கூலி ரூ.200 கோடி லாபமா...? | சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக பரத் தேர்வு | இரண்டாவது வாரத்தில் தெலுங்கு திரையுலக ஊழியர்கள் ஸ்டிரைக் |
‛அருவி' புகழ் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி அவரது 25வது படமாக நடித்துள்ள படம் 'சக்தி திருமகன்'. இப்படம் வருகின்ற செப்டம்பர் 5ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனி அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, "இயக்குனர் சசி என்னிடம் 'பிச்சைக்காரன்' படத்தின் கதையைக் கூறும்போதே கண்களில் நீர் தேங்கியது. அந்தப் படம் சோகமான கதை இல்லை தான். ஆனால், மிகவும் உணர்வுபூர்வமானது. இந்த உணர்வை எனக்கு மீண்டும் ஏற்படுத்தும்படியான இன்னொரு கதையை சசி என்னிடம் கூறியுள்ளார். எங்கள் கூட்டணியில் அந்தப் படம் சீக்கிரம் உருவாகும்" என தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனிக்கு நடிகராக திருப்புமுனையை தந்த படம் பிச்சைக்காரன். அந்தப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெற்றி பெற்றது.