மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் ஆண்டனி, காவ்யா தாபர் நடித்துள்ள பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் வருகிற 19ம் தேதி வெளியாகிறது. இது 2016ம் ஆண்டு சசி இயக்கிய பிச்சைக்காரன் படத்தின் 2ம் பாகம் ஆகும். இந்த படம் வெளிவருவதை தொடர்ந்து அதற்கான புரமோசன் நிகழ்ச்சி சத்யம் திரையரங்கில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் விஜய் ஆண்டனியை முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார் சசி.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனி “பிச்சைக்காரன் படம் இயக்குனர் சசி எனக்கு போட்ட பிச்சை. இனி எத்தனை படங்களில் நடித்தாலும் பிச்சைக்காரன் போல ஒரு படம் எனக்கு கிடைக்காது. பிச்சைக்காரன் 2 படத்தை சசிதான் இயக்க வேண்டும் என காத்திருந்தேன். அதன்பிறகு வேறு வழியில்லாமல் படத்தை ஆரம்பித்தேன். ஆரம்பித்து 10 நாட்கள் படம் என் கைக்குள் வரவில்லை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக படம் கைவசமானது. இந்தப் படத்தின் மூலமாகத்தான் டைரக்ஷனை கற்றுக் கொண்டேன். பிச்சைக்காரன் படத்தின் காப்பியாகத்தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளேன்” என்றார்.
பின்னர் பேசிய சசி, “விஜய் ஆண்டனியிடம் சாமானிய மனிதன் ஒருவரின் பார்வை இருக்கும். பிச்சைக்காரன் படம் இயக்கிக் கொண்டிருந்தபோது நான் சாதாரணமாக வைத்த ஒரு காட்சியை புகழ்ந்து கூறியிருந்தார். படம் வெளியானபோது அந்தக் காட்சியை பலரும் கைதட்டி ரசித்தார்கள். அப்படியான ஒரு சாமானியனின் டேஸ்ட் அவரிடம் உள்ளது. அதுதான் அவரை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளது. பிச்சைக்காரன் 2 படத்தை இயக்க வேண்டும் என அவர் என்னிடம் கூறியிருந்தார். ஆனால், நான் '100 கோடி வானவில்' படத்தை இயக்குவதில் மும்முரமாக இருந்ததால் இந்தப் படத்தை என்னால் இயக்க முடியவில்லை. பிச்சைக்காரன் 2 சிறப்பான படமாக வந்திருக்கும் என நம்புகிறேன். என்றார்.