அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள படம் 'பிச்சைக்காரன் 2'. விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து நடித்துள்ளார். காவ்யா தாப்பர், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், மன்சூர் அலிகான், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு நடித்துள்ளனர். ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சசி இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் இது. இந்த படத்தை இயக்க சசி மறுத்து விட்டதால் விஜய் ஆண்டனி இயக்கினார். விஜய் ஆண்டனி படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. இதில் விஜய் ஆண்டனி விஜய் குருமூர்த்தி என்ற இந்தியாவின் 7வது பெரும் கோடீஸ்வரராக நடித்துள்ளார். அவரே ஒரு கொலை வழக்கிலும் சிக்குகிறார். இருவரும் ஒருவரா, வெவ்வேறு நபரா, என்பதுதான் படத்தின் கதை.
தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளிவருவதாக இருந்த படம் சில பிரச்சினைகளால் வரவில்லை. அதோடு இந்த படத்தின் கதை எங்களுடையது என்று 'ஆய்வுக்கூடம்' என்ற படத்தை தயாரித்த ராஜகணபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போதும் நடந்து வருகிறது. இந்த நிலையில் படம் வருகிற 19ம் தேதி வெளிவருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.