மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தெலுங்குத் திரையுலகத்தில் இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இரண்டு படங்கள் பெரும் தோல்வியைச் சந்தித்தது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஒன்று 'கேம் சேஞ்சர்' படம், மற்றொன்று 'ஹரிஹர வீரமல்லு' படம்.
'கேம் சேஞ்சர்' படத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடித்திருக்க, 'ஹரிஹர வீரமல்லு' படத்தில் அவரது சித்தப்பா பவன் கல்யாண் நடித்திருக்க இரண்டுமே தோல்வியில் முடிந்தது அவர்களது குடும்பத்தினருக்கும் அதிர்ச்சிதான்.
'கேம் சேஞ்ஜர்' படம் சுமார் 400 கோடி செலவில் தயாராகி 200 கோடி வசூலித்ததாகவும், 'ஹரிஹர வீரமல்லு' படம் சுமார் 250 கோடி செலவில் தயாராகி 100 கோடிக்கும் சற்று கூடுதலாகவும் வசூலித்ததாகவும் டோலிவுட் வட்டாரத் தகவல். இதில் குறிப்பிட வேண்டிய ஒரு ஒற்றுமை இருக்கிறது. இரண்டு படங்கள்தான் இந்த ஆண்டில் ஓபனிங் வசூலில் சாதனை படைத்த தெலுங்குப் படங்கள்.
'கேம் சேஞ்ஜர்' ஓபனிங் வசூலாக 90 கோடியையும், 'ஹரிஹர வீரமல்லு' படம் ஓபனிங் வசூலாக 70 கோடியையும் வசூலித்தன. ஆனால், அடுத்த சில நாட்களில் அவை அப்படியே கீழிறங்கிப் போய்விட்டன.
எவ்வளவு பிரம்மாண்டம் இருந்தாலும் கதை ஒன்று அழுத்தமாக இருக்க வேண்டும். அது இல்லையென்றால் எவ்வளவு பட்ஜெட், எவ்வளவு பெரிய நடிகர்கள் என்பது முக்கியமில்லை என்பதை இந்த இரண்டு படங்களும் நிரூபித்துள்ளன.