சீக்கிரம் சசி உடன் மீண்டும் ஒரு படம் : விஜய் ஆண்டனி | இப்பவே கூலி ரூ.200 கோடி லாபமா...? | சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக பரத் தேர்வு | இரண்டாவது வாரத்தில் தெலுங்கு திரையுலக ஊழியர்கள் ஸ்டிரைக் | உடல் மெலிந்து உருமாறிய தோற்றத்தில் அதிர்ச்சி அளித்த பிரபல குணச்சித்திர நடிகர் | மம்முட்டியை பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை : பெண் தயாரிப்பாளர் விளக்கம் | ஸ்வேதா மேனனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரகுமான் | நடிகர் விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிப்பு : சுதீப், ரிஷப் ஷெட்டி வருத்தம் | 65 ஆயிரம் கேட்ட பஹத் பாசிலுக்கு ஒரு லட்சம் கொடுத்தேன் : தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் | 'கேம் சேஞ்ஜர், ஹரிஹர வீர மல்லு' தோல்விகள் தரும் பாடம் என்ன? |
மலையாள திரை உலகில் நடிகர் சங்கத்திற்கான புதிய தேர்தல் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெற இருக்கிறது. கடந்த வருடம் நடிகர் சங்க தலைவராக இருந்த மோகன்லால் ராஜினாமா செய்த நிலையில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என கூறி விட்டார். இதனை தொடர்ந்து பலரும் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். அந்த வகையில் நடிகை ஸ்வேதா மேனன் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாட்ஷா பட வில்லன் நடிகர் தேவன் போட்டியிடுகிறார். ஆனால் ஸ்வேதா மேனனின் புகழை குறைக்கும் விதமாக சமீபத்தில் அவர் எப்போதோ ஒரு பேட்டி ஒன்றில் கூறிய சர்ச்சையான கருத்தை முன்வைத்து அதன் மூலமாக தற்போது அவர் மீது காவல்துறையில் ஒருவர் வழக்கு தொடர்ந்து ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆரும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அந்த வழக்கை நிறுத்தி வைத்து விட்டது. இந்த நிலையில் நடிகர் ரகுமான் ஸ்வேதா மேனனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “டியர் ஸ்வேதா. உங்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது கண்டு நான் மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்தேன். இந்த அநீதியை பார்த்ததும் என் இதயம் கோபத்தால் கொதித்தது. உங்களை கிட்டத்தட்ட 30 வருடங்களாக எனக்கு நன்கு தெரியும். இத்தனை வருடங்களில் நீங்கள் ஒரு நல்ல நண்பராக இருந்து உள்ளீர்கள். திரையில் நான் சந்தித்த அன்பான நேர்மையான மனிதர்களில் நீங்களும் ஒருவர். நாம் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட அந்த சமயத்தில் உண்மையான நட்பை என்னிடம் வெளிப்படுத்தினீர்கள். இப்போது இருக்கும் இந்த சூழல் கொஞ்சம் மோசமானதாக தான் இருக்கிறது. உங்கள் நல்ல பெயரை குறைப்பதற்கான அப்பட்டமான முயற்சி என்பது இது நன்றாகவே தெரிகிறது. இதனால் உங்கள் மன தைரியம் உடைந்து விடாதீர்கள். இப்போது அடிக்கும் புயலை விட நீங்கள் வலுவானவர். நீங்கள் மலையாள நடிகர் சங்கத்தின் மிகச்சிறந்த தலைவராக வருவீர்கள் என எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறியுள்ளார்.