மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
முன்னணி தெலுங்கு நடிகர் பவன் கல்யாண். தனது நடிப்பில் உருவாகி உள்ள 'புரோ' படத்தின் புரமோசன் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த படத்தை சமுத்திரகனி இயக்கி உள்ளார். பிரமோசன் நிகழ்வொன்றில் பேசிய பவன் கல்யாண் "தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என புதிய விதி கொண்டு வந்துள்ளனர். குறுகிய மனநிலையுடன் இல்லாமல் பெரிதாக யோசித்தால் தமிழ் சினிமா 'ஆர்ஆர்ஆர்' போன்ற சர்வதேச படத்தை கொடுக்க முடியும். இன்று தெலுங்கு திரையுலகம் இந்த அளவு வளர்ச்சியை கண்டதற்கு காரணம், இங்கு அனைத்து மொழியை சேர்ந்தவர்களும் பணியாற்றுகிறார்கள். உதாரணத்துக்கு சமுத்திரகனி தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும் அவர் தெலுங்கு படங்களை இயக்குகிறார், அதேபோல் ஏ.எம் ரத்தினம் ஆந்திராவை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் தமிழில் ஏராளமான படங்களை தயாரித்து இருக்கிறார். ஆதலால் இந்த முடிவை கைவிட வேண்டும்" என்றார்.
இதற்கு பதிலளித்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது: பிற மொழி நடிகர்கள், தமிழ் படங்களில் பணியாற்ற முடியாது என்கிற தகவல் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறானது. இதுபோன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால், அதற்கு முதல் ஆளாக நான் தான் எதிர்ப்பு தெரிவித்திருப்பேன்.
இப்போது நாம் பான் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதனால் பிறமொழியை சேர்ந்த நடிகர், நடிகைகளும் இங்கு நடிக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த மாதிரி நிலையில், யாரும் பிறமொழி நடிகர்கள், தமிழ் படங்களில் பணியாற்றகூடாது என்கிற தீர்மானத்தை போட மாட்டார்கள்.
தமிழ் திரைப்படங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை கருதி, தமிழ்நாட்டுக்குள் படங்களை எடுக்க வேண்டும், தமிழ் திரைப்பட தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் இங்கு சினிமாவை நம்பி உள்ள தொழிலாளர்களின் நலன் கருதி எடுகப்பட்டுள்ளதே தவிர, மற்றபடி தமிழ் படங்களில் தமிழ் நடிகர்கள்தான் நடிக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை.
பிற மொழிகளில் உள்ள திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் பெருமைமிக ஒரு திரையுலகம் தான் தமிழ் சினிமா. வந்தாரை வாழ வைக்கும் ஊர் இது. சாவித்ரி, வாணி ஜெயராம் என ஏராளமானோர் இங்கு வந்து பிரபலமாகி இருகின்றனர். இந்த தவறான தகவலை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒன்றாக படங்களை எடுப்போம் அதை உலக அளவுக்கு கொண்டு செல்வோம்.
இவ்வாறு நாசர் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.