'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் |
சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் நடித்த 'ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா' சுருக்கமாக ‛ஜேஎஸ்கே' என்ற மலையாளப் படம் கடந்த மாதம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு படத்தின் டைட்டிலில் ஜானகி என்ற பெயரை நீக்க வேண்டும். அதோடு படத்தின் வசனத்தில் வரும் ஜானகி என்ற சொல்லையும் நீக்கினால்தான் படத்திற்கு சான்றிதழ் தர முடியும் என்று கூறிவிட்டது. இதனால் படம் திட்டமிட்டபடி வெளிவரவில்லை.
இதை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிபதி கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தை பார்த்தார். இந்த நிலையில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. தணிக்கை குழு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் படத்தில் கதாபாத்திரத்தின் பெயர் ஜானகி வித்யாதரன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே படத்தின் பெயரை வி. ஜானகி என்றோ ஜானகி, வி என்றோ மாற்றலாம்.
மேலும் நீதிமன்ற காட்சிகளில் குறுக்கு விசாரணையின் போது 2 இடங்களில் ஜானகி என்ற பெயரை மியூட் செய்ய வேண்டும். மற்ற இடங்களில் ஜானகியின் பெயரை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த மாற்றங்களை செய்தால் உடனடியாக படத்திற்கு அனுமதி அளிக்கத் தயார். என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை படத்தின் தயாரிப்பாளர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணையை 16ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.