அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? |
தி செய்லர்மேன் பிக்சர்ஸ் சார்பில் எல்.கார்த்திகேயன் தயாரித்து பிரியா கார்த்திகேயன் இயக்கி உள்ள சுயாதீன படம் 'பேரடாக்ஸ்'. துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மிஷா கோஷல் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். பைசல் வி.காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசை அமைத்துள்ளார். படம் ஓடிடியில் வெளியாகிறது.
சேரன் இயக்கிய பொக்கிஷம் படத்தில் நாயகியின் தங்கையாக அறிமுகமானவர் மிஷா கோஷல். அதன்பிறகு நான் மகான் அல்ல, 180, 7ம் அறிவு, முகமூடி, ராஜா ராணி, வணக்கம் சென்னை, வடகறி, விசாரணை, குற்றம் 23, மெர்சல், லத்தி, ரத்தம் உள்ளிட்ட படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்தார். தற்போது அவர் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் இது.
படம் குறித்து இயக்குனர், பிரியா கார்த்திகேயன் கூறும்போது "பேரடாக்ஸ் என்றால் 'முரண்பாடு' என்று தமிழில் பொருள்படும் இந்த தலைப்பு, மனித உளவியல் சார்ந்த கதைக்கு பொருந்தும் வகையில் அமைந்துள்ளது. ஒரு மனிதனின் உளவியல் பற்றி இந்த படம் அலசுகிறது. சராசரி வாழ்க்கையை வாழும் நாயகன் கொஞ்சம் கொஞ்சமாக தனது மனைவி மற்றும் குடும்பத்தை விட்டு விலகி செல்கிறான். இந்த நிலையில் ஒரு எதிர்பாராத சம்பவம் நிகழ்கிறது. இதை தொடர்ந்து என்ன ஆகிறது? என்பதே கதை'' என்றார்.