10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு |
தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கெவி. அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடிக்க, 'டூ லெட்', 'மண்டேலா' புகழ் ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள கெவி என்கிற கிராமத்தைச் சுற்றி, அந்தப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. ஜி.பாலசுப்பிரமணியன், சா.ராஜா ரவிவர்மா இசையமைத்துள்ளனர். ஜூலை 18 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
படம் குறித்து இயக்குநர் தமிழ் தயாளன் பேசும்போது, “நாமெல்லாம் மலைப்பகுதியில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு சென்றால் அங்குள்ள இயற்கையை ரசித்து விட்டு அங்கிருந்து கிளம்பி வந்து விடுகிறோம். ஆனால் அந்த இயற்கையோடு இணைந்து அங்கே வாழ்கின்ற கவனிக்கப்படாத, குரலற்ற தங்களது வலியைக் கூட சொல்ல முடியாத மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கை நம் கவனத்திற்கு வருவதில்லை.
அவர்களைக் கடந்து தான் நாம் சென்று வருவோம். ஆனால் அவர்கள் நம் கவனத்தில் வராமலேயே போய் விடுவார்கள். அப்படிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை, வலியை வெகுஜன மக்களுக்கு கொண்டு செல்வது தான் இந்த கெவி படத்தின் நோக்கம். இதற்காக கொடைக்கானல் மலைப்பகுதியிலேயே கிட்டத்தட்ட 110 நாட்கள் தங்கி இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.
இந்த படம் தமிழக முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். அப்போது தான். இதில் சொல்லப்பட்டிருக்கும் மக்களின் வலியையும் புரிந்து கொள்ள முடியும். ஒரு உயிர் பிறப்பது இயற்கை. ஆனால் தானாகவே சாவது என்பது அந்த உயிர்கள் மீது, மக்கள் மீது தொடுக்கப்படும் ஒரு மிகப்பெரிய வன்முறை.
வருங்காலங்களில் இந்த வன்முறை நடக்கக் கூடாது. அந்த மக்களும் கவனிக்கப்பட வேண்டும். அவர்களது கதறல் சத்தமும் இந்த உலகிற்கு கேட்க வேண்டும். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் எல்லாமே கிடைக்க வேண்டும் என்கிற கோணத்தில் தான் இந்த படம் தயாராகி உள்ளது'' என்றார்.