விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்றவர் கெவின் ஸ்பேசி. 62 வயதான இவர் ஓரின சேர்க்கையாளர். இவர் தங்களிடம் வலுக்கட்டாயமாக இயற்கைக்கு மாறாக உறவு கொண்டதாக வெவ்வேறு கால கட்டங்களில் 3 பேர் புகார் அளித்தனர். இது தொடர்பாக லண்டன் போலீசார் கெவின் ஸ்பேசி மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்குகள் தற்போது இறுதி கட்டத்திற்கு வந்திருக்கிறது. இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகிற 10ம் தேதி நடக்க இருக்கிறது. அன்றே தீர்ப்பும் வழங்கப்படலாம் என்று தெரிகிறது. அன்றைய தினம் நேரில் அஜராகுமாறு லண்டன் நீதிமன்றம் கெவினுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கில் கெவின் ஸ்பேசிக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக இருந்த கெவின் 1980ம் ஆண்டு ஹாலிவுட் சினிமாவில் நுழைந்தார். சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் என இருமுறை ஆஸ்கர் விருதுகளை வென்றவர். கெவின் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததும் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். பல படங்களில் இருந்து நீக்கப்பட்டார்.