சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
கோலிவுட்டில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடக்கிறது. சில தினங்களுக்கு முன் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி நடித்த 3bhk படத்தின் நன்றி அறிவிப்பு விழா நடந்தது. படம் 300 தியேட்டரில் ஓடிகிறது. தயாரிப்பாளருக்கு ஓரளவு லாபம். அதனால் நன்றி அறிவிப்பு விழா என்றார்கள்.
அடுத்து ராம் இயக்கத்தில் சிவா, கிரேஸ் ஆண்டனி நடித்த பறந்து போ படத்தின் நன்றி அறிவிப்பு விழா அடுத்து நடந்தது. படம் வெற்றி என்பதால் இந்த விழா என்றார்கள். இந்நிலையில் இன்று மதியம் அனல் அரசு இயக்கத்தில் விஜய்சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நடித்த பீனிக்ஸ் பட நன்றி அறிவிப்பு நடந்தது.
இதில் பேசிய சூர்யா சேதுபதி, ‛‛நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பேச்சு வரலை. விமர்சனங்களை தாண்டி படம் வெற்றி பெற்றுள்ளது. இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குனர், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்க்கு நன்றி. இந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜலட்சுமி இயக்குனரின் மனைவி. அவர் எனக்கு அவ்வளவு சப்போர்ட் ஆக இருந்தார் அவருக்கும் நன்றி என்றார்.
விழாவில் பேசிய இயக்குனர், இந்த படத்தை சூர்யாசேதுபதி படமாக பார்க்காதீர்கள். அவர் போன்று ஏகப்பட்ட புதுமுகங்கள் நடித்து இருக்கிறார்கள். அவர் எதிர்காலத்துக்காக இந்த படம் ஓடணும் என்ற ரீதியில் பேசிவிட்டு விமர்சனங்கள் குறித்த தனது கவலையை தெரிவித்தார்.